பெங்களூரு: கோலாலம்பூரில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வழியாக தள்ளுவண்டியில் கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள், குட்டி குரங்குகள், முதலை குட்டிகள் உள்ளிட்ட அரிய வகை வன விலங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நவம்பர் 12ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் தரையிறங்கியது.அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். இரு பயணிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
அவர்கள் கொண்டு வந்த தள்ளுவண்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு தள்ளுவண்டியில், அல்டாப்ரா ஆமைகள், சிவப்பு கல் ஆமைகள், பல்லிகள், அல்பினோ பேட் உட்பட 24 விலங்குகள்; மற்றொரு தள்ளுவண்டியில் 16 விலங்குகள் இருந்தன, அதில் லுடினோ இகுவானாஸ், ஒரு குட்டி அமெரிக்க முதலை மற்றும் ஒரு குரங்கு.
இவற்றை கடத்தி வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தள்ளுவண்டியில் கடத்தப்பட்ட குரங்கு மற்றும் ஆமை குட்டி.