புதுடெல்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான முடா வழக்கில் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்க இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் கீழ் அமலாக்க இயக்குனரகம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதியின் பெயர்கள் சிக்கியுள்ளன. முடா நிறுவனம் கையகப்படுத்திய 3 ஏக்கர் 16 குண்டாஸ் நிலத்துக்கு ஈடாக முதல்வர் சித்தராமையா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவி பார்வதியின் பெயரில் முக்கிய இடங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பணமோசடி வழக்கில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.