டெல்லி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சொத்து விவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாகப் பரப்பியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தம்பாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகாரில் ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “எடப்பாடி பழனிசாமி மீதான தேர்தல் மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக அரசு, மிலானி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.