மும்பை: நடிகை கரீனா கபூர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு அவரது குடும்பத்தினரும் மேலாண்மை குழுவினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து கரீனா கபூர் வெளியே வந்தபோது, புகைப்படக் கலைஞர்களிடமிருந்து அவரை பாதுகாக்கும் வகையில் குழுவினர் குடை பிடித்துச் சென்றனர். அப்போது அவர் அணிந்திருந்த உடையில் வயிறு சற்று பருமனாகத் தெரிந்ததால், அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதற்கு பதிலளித்த கரீனா கபூரின் குழுவினர், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவித்துள்ளனர். விடுமுறை பயணத்தின் போது அதிகமாக உணவு எடுத்துக்கொண்டதால் வயிறு சற்று பெரிதாகத் தெரிந்திருக்கலாம் என்றும் நகைச்சுவையாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை கரீனா கபூரும் சமூக வலைதளப் பதிவின் மூலம் நகைச்சுவையாக கடந்து சென்றுள்ளார். சயீஃப் அலிகானின் சகோதரி சபா பட்டோடியும் வதந்திகளை மறுத்துள்ளார். கரீனா கபூர் – சயீஃப் அலிகான் தம்பதிக்கு ஏற்கனவே தைமூர், ஜேஹ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
