சென்னை : நடிகை பார்வதி நாயரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இதை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான கோட்(GOAT) திரைப்படத்தில் நடித்து பிரபலமான பார்வதி நாயர் சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்ரித் அசோக் என்பவரை மணந்தார்.
தெலுங்கு மற்றும் மலையாள மரபுகளின்படி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது. திருமண நிகழ்ச்சியில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை பார்வதி நாயரின் இந்த திருமண புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.