கொல்கத்தா: மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, ஜூனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பாவ்நகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் பதான் உள்ளிட்ட குஜராத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மீட்புக் குழுக்கள் அங்கு சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கார்பட்டா தொகுதியின் கீழ் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் தண்ணீரில் மூழ்கின. மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.