சென்னை : இயற்கை நமக்கு அளித்துள்ள பல்வேறு பொருட்கள் மிகுந்த நன்மையை அளிப்பவை. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜூஸ் செரிமானத்திற்கு வழிவகுப்பதோடு, கெட்டக்கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கிறது. இதனால், உடல் எடை சுலபமாக குறையும். சருமம் பளபளப்பது மட்டுமின்றி முடி உதிரும் பிரச்சனையும் நீங்கும். உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
சோம்பு தண்ணீர் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி, எடையைக் குறைக்கிறது. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதியை குறைத்து சரியான உடல் அமைப்பை தருகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் மூளையில் நேச்சுரல் ஹார்மோனை சுரக்க வைத்து நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.
செம்பருத்தி தேநீர் அருந்துவதால் சருமம் பளபளப்பாவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இது ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்க இந்த தேநீர் மிகுந்த உதவி புரிகிறது. கர்ப்பப்பையில் கட்டி உள்ள பெண்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த தேநீரை அருந்தலாம்.