By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு
அரசியல் செய்திகள்

குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு

Nagaraj
Last updated: January 25, 2026 5:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

மும்பை: குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.

மும்பை: மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 17 மாநகராட்சிகளை பாஜக தனித்து கைப்பற்றியது.

மும்பை உட்பட மேலும் 8 மாநகராட்சிகளை பாஜக, சிவசேனா (ஷிண்டே) அடங்கிய மகாயுதி கூட்டணி கைப்பற்றியது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒவ்வொரு மாநகராட்சியிலும் தனித்தனியாக குலுக்கல் நடத்தப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப் பிரிவு, மகளிர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினரில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன்படி அந்தந்த மாநகராட்சிகளில் நேற்று குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் மும்பை மேயர் பதவி பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 89, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

மும்பை மாநகராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் உள்ளனர். வரும் 28-ம் தேதி மும்பை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் பாஜக பெண் கவுன்சிலர்கள் யோகிதா சுனில் கோலி, தேஜஸ்வி அபிஷேக் கோசல்கர் ஆகியோர் முன்வரிசையில் உள்ளனர்.

உத்தவ் அணி எதிர்ப்பு: மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடந்த குலுக்கலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், குலுக்கலின்போது ஓபிசி மற்றும் எஸ்டி பிரிவு சேர்க்கப்படவில்லை என்றும் உத்தவ் அணியை சேர்ந்த முன்னாள் மேயர் கிஷோரி பட்னாகர் குற்றம் சாட்டினார்.

தற்போது எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே அணியில் மட்டுமே உள்ளனர். ஒருவேளை குலுக்கலின்போது மும்பை மேயர் பதவி எஸ்டி பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் உத்தவ் அணிக்கு மேயர் பதவி கிடைத்திருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

16 பெண் மேயர்கள்: மும்பையை தவிர்த்து நவிமும்பை, புனே உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக பெண் மேயர்கள் பதவியேற்க உள்ளனர். தற்போது நடத்தப்பட்டு உள்ள குலுக்கல் நடைமுறைக்குப் பிறகு 29 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

You Might Also Like

டெண்டர் இல்லாமல் ரூ.1.35 கோடி கூடுதல் வேலைகள், கோவை மாநகராட்சியில் முறைகேடு

இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறு ஒன்றும் கிடையாது… பிரேமலதா ஆதரவு

சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டால் ஆதரவு: வைத்திலிங்கம் அறிவிப்பு!

பொதுப்பணித்துறையில் புதிய டெண்டர் வழிகாட்டுதல்

TAGGED:corporationElectionmayoraltyMumbaiprocedureshake-upகுலுக்கல்தேர்தல்நடைமுறைமாநகராட்சிமும்பைமேயர் பதவி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?