சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 620 அம்மா உணவகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் உணவு தரம், சுவை திருப்திகரமாக இல்லை என புகார் வந்ததை அடுத்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
சமையல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும், தரமான உணவை வழங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவக சீரமைப்பிற்கு மாநகராட்சி, நகராட்சி பொது நிதியிலிருந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் 237 அம்மா உணவகங்களும் செயல்படுகின்றன. இவற்றை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.