சென்னை : துரோகி என்றாலே அது இபிஎஸ்தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
துரோகி என்றால் அது இபிஎஸ் தான் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுசேராது என ஓபிஎஸ்ஸை மறைமுகமாக விமர்சித்திருந்தார் இபிஎஸ்.
இதுபற்றி கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், தமிழக வரலாற்றில் எட்டப்பன் போல, இனி துரோகி என்பதற்கு இபிஎஸ்ஸின் பெயர் தான் உச்சரிக்கப்படும் என சாடினார்.
தன்னை துரோகி என்பதை இபிஎஸ் தாமாகவே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.