சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விளையாட்டு பிரிவு தலைவர் பெரம்பூர் நிசார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இரத்த தான முகாமையும், தமிழ்நாடு தொழில்முறை காங்கிரஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் ஏற்பாடு செய்த காது கேளாமை சிகிச்சை மருத்துவ முகாமையும் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு சினிமா பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் ஓட்டை இருக்காது. இந்த கூட்டணி ஒரு கோட்டை போன்றது. இது இந்தத் தலைமுறைக்கான கூட்டணி மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கான கூட்டணி என்றும் அவர் கூறினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர்கள் உ. பலராமன், கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், மாநில பொதுச் செயலாளர்கள் டி. செல்வம், தளபதி பாஸ்கர், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெ. பாலமுருகன், தாம்பரம் நாராயணன், மாவட்டத் தலைவர் ஜெ. டில்லிபாபு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.