சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை தொடங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
மேலும் பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகி தவெகவில் இணைந்ததால் அந்த 4 தொகுதிகளும் காலியாகின.
இந்நிலையில் மொத்தம் 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.