சென்னை: பூண்டில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்தி நிவரணம் தருகிறது. இந்த பதிவில் பூண்டில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
- பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.
- பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.
- பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்.
- குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.
- தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.
- பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு, ஈ, மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.