2025 பிப்ரவரி 4 அன்று, சீன நிதி அமைச்சகம் அமெரிக்காவின் இறக்குமதிகள் மீது புதிய வரி விதிப்பதை அறிவித்தது. அமெரிக்கா 10% வரி விதிக்க முடிவு செய்த நிலையில், சீனா பல்வேறு அமெரிக்க பொருட்கள், அதாவது நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு (LNG), கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் மீது வரி விதித்துள்ளது. இந்த புதிய வரிகள் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்புக்கு அமெரிக்கா எதிர்வினையாக, சீனாவின் போட்டித்தன்மை விதிமுறைகள் மீறியதாக கூகுளை விசாரிக்கவும், சில மூலப்பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வர்த்தகப் போர் உலகளாவிய வணிகத்தின் மேல் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன, இது சர்வதேச சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.