சென்னை: உலகத் தமிழர்கள் ஒன்றிணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “கடாரம் கொண்டான்” சர்வதேச மாநாடு கம்போடியாவில் வரும் நவ.21ம் தேதி முதல் 26ம் தேதி வரை மிகச் சிறப்பாக நடக்க உள்ளது.
அங்கோர் தமிழ்ச்சங்கம், சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்“கடாரம் கொண்டான்” சர்வதேச மாநாடு வரும் நவம்பர் 21ம் தேதி முதல் –26ம் தேதி வரை கம்போடியாவின் சியம்ரீப் நகரில் உள்ள சிறப்புமிக்க பயான்ஈரா ஹோட்டல் வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கியமான கல்வி அமர்வுகள் வரும் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி நடக்கிறது.
முதல் முறை மிதிவண்டியில் “அணு ஆயுத ஒழிப்பு விழிப்புணர்வு” குறித்து உலக நாடுகளுக்கு செய்தி கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் மேலும் 7 முறை மோட்டார் வாகனங்களில் “மழைக்காடுகளை காப்போம்”, “சுற்றுச்சூழலைபாதுகாப்போம்”, “அண்டார்டிகாவை காப்போம்”, “உலக வெப்பமயமாதலைத்தடுப்போம்” போன்ற மனிதகுல நலக் கோஷங்களை முன்னிறுத்தி உலகத்தைச் சுற்றிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த உலகப் பயணங்கள் பண்பாட்டு பொறுப்பை உலக மேடையில் அறியச் செய்த வரலாற்றுச் சாதனைகளாக அமைந்தன.
தென்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த சோழபேரரசர்கள், ராசராச சோழனும் அவரது மகன் ராசேந்திரசோழனும்ஆவர். ராசராசன் இட்ட அடித்தளத்தை தனது பேராற்றலால் ராசேந்திரசோழன் கட்டியெழுப்பினார். பூமியை அளந்து பகுத்தல், ஆவணப்படுத்துதல், தொழில் வளர்த்தல், வரிமுறை, வாழ்க்கை முறை, நீர்மேலாண்மை/நில மேலாண்மை, நீதிமுறை, தானம் முதலிய துறைகளில் அவர்கள் எண்ணிலடங்கா சாதனைகள் புரிந்தனர். தந்தை ராசராசனின் தஞ்சாவூர் பெரிய கோயிலும், மகன் ராசேந்திர சோழனின்“கங்கை கொண்ட சோழபுரமும்”காலங்களைக் கடந்து புகழ்பெற்ற சின்னங்களாய் இன்று நிற்கின்றன.
இந்திய வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி, கடல் கடந்து பல தேசங்களை வென்ற மாமன்னன்முதலாம் ராசேந்திரசோழன் தந்தையை மிஞ்சிய தனயனாக, உலக அரங்கில் தமிழரின் பெருமையை நிலைநாட்டினார். ஒட்டக்கூத்தர்எழுதியமூவருலாவில்:
“கங்கா நதியும்கடாரமும் கைக்கொண்டு… சிங்காதனத் திருந்த செம்பியர்கோன்” என்று ராசேந்திரனின்கங்கை வெற்றி&கடார (கெதா) வெற்றியை கோலாகலமாகப் புகழ்கிறது.
சுருக்கமான வரலாறு:
பிறப்பு&பட்டப்பகை: ராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவிக்கும் ஆடித் திருவாதிரையன்று பிறந்தவர் ராசேந்திரசோழன் (இயற்பெயர்மதுராந்தகன்; விருதுப்பெயர்கள்: முடிகொண்ட சோழன், உத்தமசோழன், விக்கிரமசோழன், பண்டிதசோழன்). ஆட்சி:கி.பி. 1012–1044. 1012-இல் இணை அரசனாகவும்1014-இல் முழு அரசனாகவும்; 1017-இல் இலங்கை வெற்றி.
ஆட்சி பரப்பு: தொல்காப்பியத்தின் “வேங்கடம்–குமரி” எல்லையைத் தாண்டி, தென் இந்தியா பெரும்பகுதி, இலங்கை, மேலும் தென்கிழக்காசிய நாடுகள் வரை சோழ ஆட்சியை விரிவுசெய்தார்.ராசாதிராசன்திருமழபாடிகல்வெட்டில், வடகங்கைமுதல் தென்இலங்கை, மேற்குமகோதை (கேரளம்)முதல் கிழக்குகடாரம் (கெதா)வரை சோழமண்டலதுல்லியமாகச்சுட்டப்பட்டுள்ளது.
கடற்படை&கடல்போர்: இன்றைய தொழில்நுட்பங்கள் இன்றி, மாபெரும் கப்பற் படைகளை உருவாக்கி, வணிகப்பாதைகள் பாதுகாப்பு& கடற்கொள்ளையர் தடுக்கும் நோக்கில் சுமத்ரா/ஸ்ரீவிஜயம் பகுதிகளுக்கு வரை கடல் படையெடுப்புகளை நடத்தினார். இதுவே அவருக்கு“கடாரம் கொண்டான்”பட்டத்தைத் தந்தது. லெய்டன்செப்பேட்டும், மலேசியாகெதாகல்வெட்டும் இவ்வெற்றிக்குச் சான்று.

போர் பயணங்களால் தஞ்சைவிவசாயத்துக்கு இடையூறு அண்டாதபடி தலைநகரை“கங்கை கொண்ட சோழபுரம்”நோக்கி மாற்றினார் (கி.பி.1027). கங்கை நீரைத் தாயகத்துக்கு கொண்டு வந்த நினைவாக நகரத்திற்கும் தமக்கும்“கங்கை கொண்ட சோழன்”என்ற பெயர் நிலைபெற்றது. இங்கு சோழகங்கம் எனும் பெரிய ஏரியும் (ஜலஸ்தம்பம் நினைவு), மிகப்பெரிய லிங்கமுடைய சிவாலயமும் உருவானது.
வென்ற பகுதிகளை நேரடியாக இணைக்காது, அங்கு இருந்த அரசர்களிடம் மீண்டும் ஒப்படைத்த கருணைமிக்க ஆட்சி, அமைதி–வளர்ச்சி மையமான “பிற்கால சோழர்களின் பொற்காலம்”. சோழ–கெமர் ஒத்துழைப்பு& அங்கோர்வாட்: 11-ஆம் நூற்றாண்டில் வணிக–பண்பாட்டு ஒத்துழைப்பு உச்சத்தை எட்டியது; இன்றுஅங்கோர் வாட் (500 ஏக்கர்) அந்த நட்புறவின்நித்தியச் சின்னம்.
ஏன் கம்போடியாவில் “கடாரம் கொண்டான்”?
ராசேந்திரசோழனின் கடற்படை வெற்றிகெமர் மன்னர் சூர்யவர்மன்Iஆட்சியை வலுப்படுத்தி, தமிழ்–கெமர்நாகரிகத்தொடர்பைஆழப்படுத்தியது. அந்தஆயிரம் ஆண்டுப்பாலத்தைநாமும் இம்மாநாட்டால் புதுப்பிக்கப்பட உள்ளது.
அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு சாதனைகள் பட்டியல்: உலகத் தமிழ் மாநாடு (2018), உலகக் கவிஞர் மாநாடு (2019 & 2023), உலகப்பரதக் கலைவிழா (2019 & 2020), சர்வதேச பாரதநாட்டியம் மாநாடு (2024 & 2025), திருவள்ளுவர் சிலை திறப்பு விழா&கருத்தரங்கம் (2022),
மாநாட்டின்நோக்கங்கள்:
உலகத்தமிழர்களையும்கம்போடியாவையும் மீண்டும் இணைத்து, பண்பாட்டு&கடல் வரலாற்றுத்தொடர்பைஉயிர்ப்பிக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் வரலாறு–பண்பாடு–வாணிபம்– சுற்றுலா துறைகளில்கூட்டாண்மை. 2026-இல் ராஜேந்திரசோழர்& சூர்யவர்மன்I சிலைகள் நிறுவல் தீர்மானமும், தமிழ்–கெமர் கடல் வரலாற்று அருங்காட்சியகம் திட்டத் தொடக்கமும் நடக்க உள்ளது. மேலும் வணிக&முதலீட்டு இணைப்பு: வரும் நவம்பர் 24, 2025 மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. பிஸினஸ் மீட் (நெய்தொழில், சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளின்கம்போடியா அதிகாரிகள் × உலகத்தமிழ்த்தொழில்முனைவோர்).
வணிக&முதலீட்டுசந்திப்புகள் — சிறப்பு திட்டம்: நவம்பர் 21, 2025 (மதியம்): மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக கம்போடியாவில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் முதலீட்டுவாய்ப்புகள் தொடர்பானநில ஆய்வு / வெளிக்க்களப் பயணம் (Field Visit)ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நவம்பர் 22, 2025 (மாலை 6–9 மணி): யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, கம்போடியா விவசாயஅமைச்சக அதிகாரிகள் பங்கேற்று, கம்போடியாவில் உள்ள விவசாய முதலீட்டு வாய்ப்புகள், நிலப் பயன்பாடு, பயிர் வகைகள், ஏற்றுமதி வாய்ப்புகள்ஆகியவற்றைப் பற்றி உலகத் தமிழ்த் தொழில் முனைவோருடன் விவாதிப்பார்கள். நவம்பர் 24, 2025 (மாலை 6 மணி –9 மணி வரை): யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, கம்போடியா நெய் தொழில் (Textile) அமைச்சக அதிகாரிகள் பங்கேற்று, நெய்துறை முதலீடுகள், உற்பத்தி, ஏற்றுமதி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து தமிழ்த் தொழில் முனைவோருடன் கலந்துரையாடுவார்கள்.
அத்துடன், கம்போடியாவில் ஒரு பல்கலைக்கழகம் (University) தொடங்குவதற்கானமுன்மொழிவும், அதனுடன் முழுமையான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளைக் கொண்ட விரிவான மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் திட்டமும் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்படும்
இதேபோல் நவம்பர் 25, 2025 (மாலை): யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து,கம்போடியா தேசிய பாரம்பரிய மருத்துவ மைய (National Center for Traditional Medicine)பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்த அமர்வில் பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான ஆராய்ச்சி, கல்வி, சிகிச்சை மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள்குறித்து விவாதிக்கப்படும். மேலும், சித்த மருத்துவத்தை கம்போடியாவில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரிக்க வேண்டுமெனும் அதிகாரப்பூர்வ கோரிக்கை இவ்வமர்வில் முன்வைக்கப்படும்.
கடாரம் கொண்டான் 2025 வரலாற்றை மட்டும் நினைவுகூர்வதல்ல; எதிர்காலத்திற்கான பாலம்—தமிழர்&கம்போடியா இணைந்து பண்பாடு–கல்வி–வாணிபம் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மேடை என்பதும் குறிப்பிடத்தக்கது.