தஞ்சாவூர்: அனைத்து தொகுப்பு ஊதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எம் ஆர் பி செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி படி அனைத்து தொகுப்பு ஊதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எம் ஆர் பி தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் கோரிக்கை முன்வைத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் என்று கோரிக்கை பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.