By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
    சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை
    1 Min Read
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறை
விவசாயம்

நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறை

Nagaraj
Last updated: January 11, 2026 5:55 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகள் வழங்கி உள்ளது.

தமிழகத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தூர்கட்டும் பருவம் சூழ் கட்டும் தருணம், பால் பிடிக்கும் பருவம், முற்றும் பருவம் வரை காணப்படுகிறது. பனிக்காலம் என்பதால் நோய் தோன்றியவுடன் பரவும் வேகம் பல மடங்காக அதிகரிக்கும். எனவே பயிரை கண்காணித்து உரிய மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை டிப்ஸ் வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையானது நோய் தோன்றி வேகமாக பரவும் சாதகமான நிலையில் அதனை கட்டுப்படுத்துவது அவசியம். நெல் பயிரில் குலை நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய் இலையுறை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், நெல் பழம், நெல் மணிகள் நிறம் மாறும் நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து உற்பத்தியை உயர்த்துவதுதான் ஒவ்வொருவருடைய ஒட்டுமொத்த நோக்கமாக இருக்க வேண்டும்’

குலை நோய் அறிகுறிகள்:
ஆரம்பத்தில் சிறு புள்ளிகளாக தோன்றி பின்னர் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிறமுடைய மையப் பகுதியுடன் காய்ந்த பழுப்பு நிற ஓரங்களுடன் கண் வடிவில் காணப்படும். பல புள்ளிகள் இணைந்து ஒழுங்கற்ற திட்டுக்களாக இலைகளின் மேல் காணப்படும். நோய் தீவிரமாகும் போது பயிர்கள் முழுவதும் எரிந்தது போல காணப்படும்.

இந்நோய் இலை, இலையின் உறை, தண்டு பகுதியில் உள்ள கணுக்கள் மீதும் காணப்படும். அதிக அளவு தழைச் சத்தான யூரியா இடுவதன் மூலமும், மேகம் சூழ்ந்த வான மூட்டம், விட்டு விட்டு தூறல், காற்றில் அதிக ஈரப்பதம், குறைவான இரவு நேர வெப்பநிலை இந்நோய் பரவ ஏற்ற நிலைகளாகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

நாற்றங்காலில் விதைக்கும் முன்பே விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் அல்லது பேசிஸ்லஸ் சப்டீலிஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும் யூரியாவை பரிந்துரைக்கு அதிகமாக இடக்கூடாது. நடவு வயலில் நோய் தோன்றும் போது 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு ட்ரைசைக்லோசோல் 200 கிராம் அல்லது கார்பண்டசிம் 200 கிராம் அல்லது மெட்டாமினோஸ்ட்ரோபின் 20 மில்லி தெளிப்பதன் மூலம் குலை நோயை கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியல் இலைகள் நோய் அறிகுறிகள்:
ஈர கசிவுடன் கூடிய மஞ்சள் புள்ளிகள் இலையின் நுனி மற்றும் ஓரங்களில் தோன்றி பின் நீளவாக்கில் பெரிதாகி இலையின் கீழ்நோக்கி ஒழுங்கற்ற மஞ்சள் நிறத்தில் பரவும். இந்நோய் தீவிரமாகும் போது மஞ்சள் நிறம் பழுப்பாக்கி கருகி காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:
நோய் தாக்கப்பட்ட வயல்களில் இருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் ப்ளீச்சிங் பவுடர் உடன் ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சிங்சல்பேட் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ பிளீச்சிங் பவுடரை பாசன நீருடன் கலக்க வேண்டும். கதிர் வந்த பின் யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து மேலுரமாக இட வேண்டும். 20 சத சாணக்கரைசல் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்தும். 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.

நெல் பழம் நோய் அறிகுறிகள்:
பொதுவாக கதிர் இலை வெளிவரும் பருவம், 50 சத பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி நிலை வரை நெல்மணிகளை தாக்கும். தாக்கப்பட்ட நெல் மணிகளின் மேல் மஞ்சள் நிற பந்து போல் பூஞ்சானம் காணப்படும். பந்து பெரிதாகி பச்சை நிறமாக மாறி, பின்பு கருப்பு போர்வை விரித்தது போல் தோன்றும். இந்நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் காணப்படும் இது காற்றில் எளிதில் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள், ‘

இந்நோய் வந்தபின் மருந்து தெளித்து கட்டுப்படுத்த முடியாது. எனவே நடவு வயலில் கதிர்வெளிவரும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 50 கிராம் அல்லது ப்ரொபிகோனசோல் 200 மில்லி வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

You Might Also Like

“18 மணி நேர மின்சாரத்தை எப்படி நம்புவது?” – தினகரன் கேள்வி

ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பு ஏமாற்று நடவடிக்கை? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நெல் சேமிப்பு மற்றும் கொள்முதல் மையங்களில் அமைச்சர் ர.வினோத் திடீர் ஆய்வு

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

TAGGED:Agriculture Departmentcan be controlledfarmersகட்டுப்படுத்தலாம்நெல் சாகுபடிவிவசாயிகள்வேளாண் துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?