சென்னை: டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமை தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைத் தலைமை கேட்டறிந்ததாகக் கூறினார்.
இதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தலைமை எடுக்கும் எந்த முடிவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முழுமையாகக் கட்டுப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.