சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்திற்கான இயக்குநர் தேர்வு குறித்து நீண்ட நாட்களாக பரபரப்பு நிலவி வந்தது.
முதலில் சுந்தர்.சி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பெயரும் அடிபட்டது. ஆனால் இருவரும் திட்டத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வாழ்த்து பதிவு இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.