திருவனந்தபுரம்: ‘மஞ்சுமல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜான் ஈ மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிதம்பரம், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அந்த படம் உலகளவில் ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பாலன் தி பாய்’. இந்தப் படத்தின் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார்.
சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.
‘பாலன்’ என்பது 1938-ல் வெளியான மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் பெயராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.