சென்னை: தடகள வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘அங்கீகாரம்’ திரைப்படம் ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான ஜே.பி.தென்பாதியான் இயக்கியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், தடகள வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.
இதில் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.