சென்னை: அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள ரொமான்டிக் பேண்டஸி திரைப்படமான ‘டபுள் ஆக்யுபன்சி’ வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்யுபன்சி’.
இந்தப் படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அறிவியல் மற்றும் நம்பிக்கைக்கு இடையேயான மோதலையும், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதன் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘டபுள் ஆக்யுபன்சி’ திரைப்படம் ஜூன் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.