ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘ரணபலி’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்றுப் பின்னணியிலான திரைப்படம் ‘ரணபலி’. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஏதய்யா சாமி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகரான The Mummy திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட Arnold Vosloo, இந்தப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
அவரது பிறந்த நாளையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரிய தகவலை அறிவித்துள்ளது.