துபாய்: பெண்களுக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாத்திமா சனா அதிரடியாக விளையாடி 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
131 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
18.5 ஓவரில் வெற்றி
ஹர்ஷித்தா 36 ரன்களும், கவிஷா 33 ரன்களும் எடுத்து அணிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தனர். பின்னர் நிலாக்சிகா மற்றும் கவுஷிஜனி இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாளை நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
