சென்னை: மே 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள கருப்பு திரைப்படத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் நாளை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மே 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.