By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டர்பன்: முதல் ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் சாதனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > டர்பன்: முதல் ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் சாதனை
விளையாட்டு

டர்பன்: முதல் ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் சாதனை

admin
Last updated: November 9, 2024 7:49 am
By admin 3 Min Read
Share
SHARE

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி துவக்கம் தந்தார். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார்.

Deccan to Durban: Sanju Samson becomes 1st Indian to hit back-to-back T20I  hundreds - India Today

மஹாராஜ் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். கோயட்சீ பந்தில் மார்க்ரமின் கலக்கல் ‘கேட்ச்சில்’ அபிஷேக் சர்மா (7) அவுட்டானார். ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 56 ரன் எடுத்தது. தனது விளாசலை தொடர்ந்த சாம்சன், 27 பந்தில் அரைசதம் எட்டினார். குருகர் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (21) வீழ்ந்தார்.

சுழற்பந்துவீச்சை அருமையாக சமாளித்தார் கேரளாவை சேர்ந்த நம்ம ‘சேட்டன்’ சாம்சன். இறங்கி வந்து அடித்த இவர், மஹாராஜ், பீட்டர் பந்துகளில் இமாலய சிக்சர் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. சைம்லேன் ஓவரில் சாம்சன் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 18 ரன் கிடைத்தன. மஹாராஜ் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட சாம்சன், 47 பந்தில் சதம் எட்டினார். 50-100 ரன்னை எட்ட இவருக்கு 20 பந்து தான் தேவைப்பட்டது.

மஹாராஜ் வலையில் திலக் வர்மா (33) சிக்கினார். பீட்டர் பந்தை துாக்கி அடித்தார் சாம்சன். எல்லையில் ஸ்டப்ஸ் சாமர்த்தியமாக பிடிக்க, 107 ரன்னுக்கு (50 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா (2), ரிங்கு சிங் (11) நிலைக்கவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன் குவித்தது. அர்ஷ்தீப் (5) அவுட்டாகாமல் இருந்தார்.

தொடர்பில் கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. கேப்டன் மார்க்ரம் (8), ஸ்டப்ஸ்(11), ரிக்கிள்டன் (21) விரைவில் வெளியேற 6 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்து தவித்தது. வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவரில் (12வது) ‘ஆபத்தான’ கிளாசன் (25), டேவிட் மில்லர் (18) நடையை கட்ட, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது. ‘டெயிலெண்டர்கள்’ பிஷ்னோயிடம் ‘சரண்டர்’ ஆகினர். தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் ‘சுழலில்’ மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். நேற்று அசத்திய சாம்சன், சர்வதேச ‘டி-20’ அரங்கில் தொடர்ந்து இரு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக 111 ரன் (ஐதராபாத், 2024) எடுத்திருந்தார்.

சர்வதேச அளவில் குஸ்தாவ் மெக்கியான் (பிரான்ஸ்) பில் சால்ட் (இங்கிலாந்து), ரில்லீ ரோசாவ்விற்கு (தென் ஆப்ரிக்கா) பின், தொடர்ந்து இரு சதம் அடித்த நான்காவது வீரரானார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ‘டி-20’ போட்டியில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரரானார் சாம்சன் (47 பந்து). இவர், சூர்யகுமார்(55 பந்து, ஜோகனஸ்பர்க், 2023) சாதனையை தகர்த்தார்.

சென்ற நாள் வாணவேடிக்கை காட்டிய சாம்சன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டி-20’ போட்டியில் அதிக சிக்சர் (10) அடித்த வீரரானார். இதற்கு முன் ரில்லீ ரோசாவ், சூர்யகுமார் தலா 8 சிக்சர் அடித்திருந்தனர்.

You Might Also Like

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முயற்சி; பிங்க் பந்துக்கு ஐசிசி அனுமதி

நட்பு கால்பந்தில் பிரேசில் கோல் மழை; பனாமாவை 6-2 என வீழ்த்தியது

பிரெஞ்ச் ஓபன்: காலிறுதிக்கு மிர்ரா ஆன்ட்ரீவா முன்னேற்றம்!

உலகக் கோப்பை கால்பந்தில் தமிழக வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு 53 சர்வதேச போட்டிகள்!

TAGGED:Cricketmatchsanju samsonசஞ்சு சாம்சன்டர்பன்முதல் 'டி-20' போட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?