By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு கனடா தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு கனடா தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்
இந்தியா

அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு கனடா தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

admin
Last updated: November 3, 2024 10:53 am
By admin 3 Min Read
Share
SHARE

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மாரிசனின் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது, அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ள இந்திய அரசு, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 2023-ல் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.

அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்! -  கூடல் | Tamil Koodal

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவுவதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக கடந்த ஓராண்டாக இந்தியா – கனடா இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் கனடாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியாவை குற்றம் சாட்டுவதற்கு கனேடிய அரசு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

கனடாவில் உள்நாட்டு அரசியலால் ஹர்தீப் சிங் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களின் சில பிரிவுகள் கனடாவில் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டன. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.

தவிர, சில கட்சிகள் காலிஸ்தான் ஆதரவாளர்களைச் சார்ந்து இருக்கின்றன. இந்நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கனடா தற்போது குற்றம் சாட்டியுள்ளது. கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை சேகரிப்புக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசன் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் சேகரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரைக் குறிப்பிட்டது நான்தான் என்று கனேடிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவின் இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது என்பதை இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கனடா தரப்பில் விளக்கம் அளிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

அக்டோபர் 29 அன்று, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன், கனடாவின் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கான நிலைக்குழு முன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து, கனடா தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் கனடிய அரசாங்கத்தால் மோசமாக நடத்தப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

அவர்களின் பேச்சு ஒட்டு கேட்கப்படுகிறது. அந்த வகையில், இராஜதந்திர விதிமுறைகளை மீறி கனேடிய அரசாங்கம் செயற்படுகின்றது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில்தான் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இது தவிர, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்தியா குறித்து தவறான கருத்துக்களை கனடா பரப்பி வருகிறது. இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி

இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்

நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்

TAGGED:allegationAmit ShahBaselessஅதிகாரிகாலிஸ்தான்குற்றச்சாட்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?