ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள புதிய அமைச்சர் ராஜநாத் சிங் அங்கு பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.