திருச்சி: திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட் ரெஸ்பாண்டிங் என வந்துள்ளது.
இதனால் வாக்காளர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகி வாக்குச்சாவடி பெண் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அது சரி செய்யப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடம் கழித்து வாக்குப்பதிவு தொடங்கியது