சென்னையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து, ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர்களை வழங்குகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் தேதியில் காஸ் விலையை மாற்றும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.