முல்லன்பூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.
சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்த நிலையில், ரிஷப் பண்ட் 81 ரன்கள் குவித்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சபி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி மிகப்பெரிய முன்னிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.