ஜெனிவா: ஐ.நா. தீர்மானத்தை மீறி செயல்படுகிறது பாகிஸ்தான் என்று ஐ.நா,. பொதுசபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஆஃப்கன் மற்றும் இந்திய எல்லைகளில் பள்ளிகள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஐ.நா.வின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் மீறி வருவதாக ஐ.நா. பொது சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற குழுவை வழிநடத்திச் சென்றுள்ள பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, ஐ.நா. பொதுச் சபையில் குழந்தைகள் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் அமர்வில் இந்தியாவின் அறிக்கையை வாசித்தார்.
அப்போது, கடந்த மே மாதம் இந்திய எல்லைப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.