லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ படங்களின் மூலம் பிரபலமான நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட், அதில் நடித்த நடிகர் ராபர்ட் பாட்டின்சன் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிந்தனர். பின்னர் 2019-ல், கிறிஸ்டன் ஸ்டீவர்ட் திரைக்கதை எழுத்தாளரும் நடிகையுமான டைலன் மேயருடன் உறவில் இருப்பதாக அறிவித்தார்.

இருவரும் தங்கள் காதலை 2021-ல் வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இருவரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்டன் ஸ்டீவர்ட் கூறுகையில், ‘டைலன் மேயர் எனக்கு முன்மொழிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர் மிகவும் அழகான பெண்மணி,’ என்று புதுமணத் தம்பதிகளுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்தும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.