By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    1 Min Read
    காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்
    1 Min Read
    குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
    1 Min Read
    உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்
    3 Min Read
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்திய திமுக… ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்திய திமுக… ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
அரசியல் செய்திகள்

அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்திய திமுக… ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

Nagaraj
Last updated: July 7, 2025 4:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: கடந்த 50 மாத கால தி.மு.க. ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் என்ற வரிசையில் ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

ஏழை, எளிய குழந்தைகளிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 50 மாத கால தி.மு.க. ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளது திராவிட மாடல் தி.மு.க. அரசு. “ஆக்குவது கடினம். அழிப்பது சுலபம்” என்று சொல்வார்கள். இந்த வகையில் அழிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதிலும் சுகாதாரத்தை கற்பிப்பதிலும், எண்கள், எழுத்துகள், வண்ணங்கள் ஆகியவற்றை போதிப்பதிலும்; கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்வதிலும் மிகப் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அங்கன்வாடி மையங்களில் முப்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததே காரணம். காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களில் நிலவும் அவல நிலையைச் சுட்டிக்காட்டி நானும் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். ஆனால், தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்ற சிந்தனையில் தி.மு.க. அரசு இருக்கிறது. தற்போது, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த காலதாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக

உழைப்பை மட்டும் கொடுங்கள்… உயிரை அல்ல: முதல்வரின் வேதனை பதிவு

காங்கிரசிற்கும், திமுகவிற்கும் ஒரே கொள்கையா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

TAGGED:AIADMKAnganwadi CentersDMKFormer Chief MinisterinsistenceRights Recovery Committeeஅங்கன்வாடி மையங்கள்அதிமுகஉரிமை மீட்புக்குழுதிமுகமுன்னாள் முதலமைச்சர்வலியுறுத்தல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?