சென்னை: ஆதியின் ‘மரகத நாணயம் 2’ படத்தின் ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிகில் கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’. ஃபேண்டஸி- காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து
தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதியின் ‘மரகத நாணயம் 2’ படத்தின் ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.