நெல்லை: தமிழக முதல்வர் விஜய் நிர்வாக திறனில் பலவீனமாக செயல்படுகிறார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக பொறுப்புகளை அவர் முறையாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் பணி என்பது திரைப்பட படப்பிடிப்பு போல் எளிதானது அல்ல என்றும், 24 மணி நேரமும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய பதவி என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரின் கையில்தான் காவல்துறை மற்றும் உள்துறை இருப்பதாக கூறினார். கரூரில் நடந்த நிகழ்வில் பலர் உயிரிழந்த நிலையில், முதல்வர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
உள்துறையை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கலாம் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை பேணுவது முதல்வரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் நிர்வாக இயலாமை தற்போது வெளிப்படுகிறது என்றும் அப்பாவு விமர்சித்தார்.