சென்னை: ‘கருப்பு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் திரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ரூ.340 கோடிக்கும் அதிகமான வசூலை படம் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு தலா கார்கள் பரிசளித்துள்ளார் சூர்யா.
இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சூர்யா மீது வைத்த நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து ஆர்.ஜே. பாலாஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.