சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்து பின்னணியில் திரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் கோழிப்பண்ணை செல்லதுரை பெரும்பான்மையான மக்களிடம் செல்லவில்லை.
ரிலீஸ் நாளில் 8 படங்கள் ரிலீஸான நிலையில், பல மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளரின் நம்பிக்கைக்கு நன்றி. நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எடுப்பவர்களுக்கு இது போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தரும்.
அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இடி முழக்கம்‘ படத்தின் வெளியீடு நடந்து வருகிறது. ஜனவரியில் புதிய படம் தொடங்க உள்ளேன். கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையாக இது இருக்கும்,” என்றார்