கண்ணா ரவி ‘கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது அவர் ‘வேடுவன்’ என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பவன் இயக்கியுள்ள இந்தத் தொடரை ரைஸ் ஈஸ்டின் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.
விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார். இந்த த்ரில்லர் பாணி தொடர் அக்டோபர் 10-ம் தேதி முதல் Zee5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படும். இதற்கான டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வலைத் தொடரைப் பற்றி கண்ணா ரவி பேசுகையில், “வேடுவன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு.

அது ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். அதில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகரின் வாழ்க்கையை மட்டுமல்ல, சவால்கள், முடிவுகள் மற்றும் தியாகங்களையும் வாழும் உணர்வை இது எனக்கு அளித்தது.
கடமைக்காகவும் அன்பிற்காகவும் மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைச் சொல்லும் கதை இது. ஒரு நடிகராக, இது எனக்கு ஒரு வித்தியாசமான சவாலாக இருந்தது.”