தேவையான பொருட்கள்:
முட்டை – 3
பன்னீர் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
துருவிய தேங்காய் – 1 கப்
முந்திரி பருப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டை, 1 கப் தேங்காய் துருவல், 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 1 சிட்டிகை சமையல் சோடா, 100 கிராம் பனீர் சேர்த்து நன்கு மசிக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவாக வந்ததும் 1 முந்திரி பருப்பை இட்லி பாத்திரத்தில் போட்டு கலவையை ஊற்றி 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். உச்சபட்ச சுவையுடன் கூடிய பனீர் இட்லி தயார். இந்த எளிய செய்முறையை வீட்டில் முயற்சி செய்ய மறக்காதீர்கள்.