திருப்பதி: திருப்பதி லட்டு விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஏ. ஆர். டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.