பாகிஸ்தானில் மூன்று வாரங்கள் தடுப்புக்காவலில் இருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் குமார் ஷா, தனது கைது கால அனுபவங்களை சோகமாக பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்டதும் இல்லாமல், தூங்கவோ, பல் துலக்கவோ அனுமதிக்காமல் கொடுமைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 23ஆம் தேதி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பூர்ணம் குமார் வழிதவறி பாகிஸ்தான் எல்லையை தாண்டிச் சென்றதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர், பாகிஸ்தானின் மூன்று தடுப்புக்காவல்களில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் மோதல் சூழ்நிலை காரணமாக அவரை உடனடியாக திருப்பி அனுப்ப முடியவில்லை. 20 நாட்கள் கழித்து, மே 13 அன்று அட்டாரி-வாகா எல்லையில், பாகிஸ்தான் அதிகாரிகள் பூர்ணம் குமாரை இந்தியப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
விடுவிக்கப்பட்ட பின் அவர் கூறியதாவது, “மூன்று இடங்களில் என்னை இடமாற்றினர். குளிக்கவும் பல் துலக்கவும் அனுமதிக்கவில்லை. உடல் ரீதியான சித்திரவைக்கு ஆளாகவில்லை. ஆனால் தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மன அழுத்தம் போன்ற சிகிச்சையற்ற செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்டேன்.”
தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், மனஅழுத்தத்தை அகற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பாதுகாப்புப் படையின் முக்கிய உறுப்பினராக பூர்ணம் குமார் மீண்டும் பணிக்கு திரும்பும் முன் முழுமையான உடல் மற்றும் மன சிகிச்சை பெற வேண்டியுள்ள நிலையில் உள்ளார்.
இந்த சம்பவம், பாகிஸ்தானின் மனிதாபிமானக் குறைபாடுகளை மீண்டும் வெளிச்சம் போட்டுள்ளது. இந்திய அதிகாரிகள், பாகிஸ்தானின் இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.