மதுரை: கையில் மல்லிகை பூவை சுற்றியபடி வந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கை பதிவு செய்தார்.
கையில் மல்லிகை பூவை சுற்றியபடி வாக்களிக்க வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் இன்று வாக்களிப்பதற்காக வந்த போது கையில் மல்லிப்பூ சரத்தை சுற்றியபடி வந்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.“எப்போதும் இப்படி வரமாட்டீர்களே.. எதனால் இந்த கெட்டப்” என செய்தியாளர்கள் கேட்ட போது, “மதுரக்காரன்..” என்று சொல்லி கையை உயர்த்தி காட்டினார் பி.டி.ஆர்.