By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
தமிழகம்

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Nagaraj
Last updated: August 4, 2025 7:20 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் ஓடுகிறது. அப்படி ரத்தம் இதயத்துக்கு வரும்போது குறிப்பிட்ட வேகத்தில் வரும். இதயத்தில் இருந்து வெளியே செல்லும்போது வேறொரு வேகத்தில் செல்லும். இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம். பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற பாதரச அளவில் இருந்தால், அது இயல்பானது, பிரச்சினையில்லை.

ரத்தம் அழுத்தம் என்பது எல்லோருக்கும் 120/80 மி.மீ. பாதரச அளவில் இருக்காது. எனவே, 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை இயல்பானது என்று உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீ பைன்டு ஆயில் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவு வகை மிகவும் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பைச் சாப்பிடலாம். காபி, தேநீருக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயைக் குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்துடன் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், எடையையும் குறைக்கும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்குப் பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக் குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.

தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப் பழக்கம் மூலம் சமாளிக்க முடியும். அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் எனப் பிற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை உயர் ரத்த அழுத்தத்துக்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.

You Might Also Like

“நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்

விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்

RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

TAGGED:blood pressurecholesterolheartpotassiumSymptomsஇதயம்கொழுப்புபொட்டாசியம்ரத்தம் அழுத்தம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?