ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 அன்று காலமானார். இதைத் தொடர்ந்து, ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அவர் முதன்முறையாக போப்பாகத் தோன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை புனித பீட்டர் பசிலிக்காவில் உரையாற்றினார். அந்த நேரத்தில், அன்னையர் தினத்தன்று உலகெங்கிலும் உள்ள தாய்மார்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை போப் லியோ XIV வரவேற்றார்.
பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிக்க காசா நிர்வாகத்திடமும் அவர் அழைப்பு விடுத்தார்.