சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜோய் கிரிசில்டா, ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆன புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இந்த புகைப்படம் தற்போதையதல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பே எடுத்த புகைப்படம் எனவும், இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு இருப்பதால் அந்த புகைப்படத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி வழக்கறிஞராக உள்ளார். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்தும் விவாகரத்து பெறப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ரங்கராஜ் ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் என்பதே இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ சிக்கலை உருவாக்கியுள்ளது. முதல் மனைவியுடன் விவாகரத்து இல்லாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்தது குற்றமாகும் என்பதையும் ஸ்ருதி பாகுபாடு காட்டியுள்ளார்.
ஜோய் கிரிசில்டாவுக்கும் இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை இயக்கிய ஜே.ஜே. ஃப்ரடெரிக் என்பவருடன் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றிருந்தார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் செய்துள்ளதாக அறிவித்ததன் பின்னணியில் உண்மையான நிலைமை என்ன என்பது குறித்து சமூகத்தில் பரபரப்பு தொடர்கிறது. முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரண்டாவது திருமணம் செய்ததாக வழக்கறிஞர் ஸ்ருதி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜோய் கிரிசில்டா திருமணத்திற்கான புகைப்படங்கள் பழையவை எனவும், தற்போது இருவருக்கிடையே பிரச்சனை நிலவி வருவதால் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் மேலும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.