By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    1 Min Read
    காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்
    1 Min Read
    குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
    1 Min Read
    உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்
    3 Min Read
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டாஸ்மாக் கடைகளை குறைப்பதுதான் அரசின் நோக்கம்… அமைச்சர் உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > டாஸ்மாக் கடைகளை குறைப்பதுதான் அரசின் நோக்கம்… அமைச்சர் உறுதி
அரசியல் செய்திகள்

டாஸ்மாக் கடைகளை குறைப்பதுதான் அரசின் நோக்கம்… அமைச்சர் உறுதி

Nagaraj
Last updated: August 12, 2025 4:25 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஈரோடு: தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடையை குறைப்பதுதான் அரசின் முதல் நோக்கம் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இது போன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடை கள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. எப்.எல் 2 கொடுக்க வேண்டுவது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல. டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றது. மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். டாஸ்மாக் கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்லமுடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ, பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

இதனை சொன்னால் பலவிதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மது வாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.

தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக

உழைப்பை மட்டும் கொடுங்கள்… உயிரை அல்ல: முதல்வரின் வேதனை பதிவு

காங்கிரசிற்கும், திமுகவிற்கும் ஒரே கொள்கையா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

TAGGED:GovernmentLiquor BottlesMinisterSalary HikeSuspensionTasmacஅமைச்சர்அரசாங்கம்சம்பள உயர்வுசஸ்பெண்ட்டாஸ்மாக்மதுபாட்டில்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?