சென்னை: குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 18 மணி நேர தடையில்லா மின்சார விநியோகத்தை விவசாயிகள் எப்படி நம்புவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறுவை சாகுபடிக்காக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், தொடர்ந்து நிலவும் மின்வெட்டு மற்றும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மோட்டார் பம்புகளை இயக்க முடியாத நிலை உருவாகி பயிர்கள் கருகி வருவதாகவும், இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிப்படி குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.