கேரளா: புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய முழு நீர்ப் பங்கையும் வழங்க கேரளா தயாராக இருப்பதாக கேரள முதல்வர் வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளார்.
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய அணையின் வடிவமைப்பு, இடத் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழகமே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான முழுச் செலவையும் கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, விழிஞ்ஞத்தை மையமாகக் கொண்டு கேரளாவை முன்னணி துறைமுக நகரமாகவும் கடல்சார் பொருளாதார மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், அதேநேரத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
