சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் நீட்சியே இரண்டாம் பாகம். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் சூரி கூறியதாவது:- இந்த விழாவில் மட்டுமல்ல, கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா முதல் திருமண விழா வரை அனைத்து விழாக்களிலும் இளையராஜா தான் ஹீரோ.
சினிமாவுக்கு வந்ததில் இருந்து பார்க்காத இடமில்லை, பார்க்காத வேலை இல்லை. அந்த வேலைகளில் இருந்து வந்து கை கால் வலியுடன் படுத்திருந்தால் எதிர் வீட்டு ஜன்னலில் இளையராஜாவின் பாடல் மெல்ல ஒலிக்கும். அந்த வீட்டுக் கதவைத் தட்டினால், கொஞ்சம் கதவைத் திறக்கச் சொன்னால், அவரது பாடல் தென்றல் போல வந்து நம்மை எழுப்பும். தாயைப் போல் அவரது பாடல் நம்மை தட்டி எழுப்பும்.
ஒவ்வொரு சகாப்தத்திற்கும் ஒரு ‘ஆப்ஷன்’ உள்ளது. ஆனால் எந்த ஒரு ‘ஆப்ஷன்’ இல்லாத ஒரே ‘ஆப்ஷன்’ இளையராஜாதான். அவருக்கு மாற்று இல்லை. அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அவர் அலுவலகத்தில் சொல்வதைக் கேட்பது எனக்கு ஒரு பெரிய மரியாதை. இது நான் மட்டுமல்ல, என் சந்ததியினரும் போற்றுவதும், பாதுகாப்பதும் பெருமையாகும்” என்று சூரி கூறினார்.